

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பிறகு பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
* வருகிற சட்டசபை கூட்டத்தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும்.
* தவெக தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுத்தால் தான் துல்லியமாக எடுக்க முடியும்.
* ஆளுநர் உரையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்க வேண்டும்.
* பழைய தரவுகள் போதுமானதாக இல்லை என உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் ஏற்கவில்லை.
* அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கினேன்.
* மாநில அரசுதான் துல்லியமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்.
* மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பு தலைகளை எண்ணுவதாகத்தான் இருக்கும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.