சமூகநீதி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் - அன்புமணி

சமூகநீதி சர்வே எடுத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளரும்.
Anbumani Ramadoss
Published on

தமிழ்நாட்டில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

* எம்ஜிஆர் தொடங்கி அனைத்து முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்தோம். விஜய் தான் அதை நடத்திக்காட்ட உள்ளார்.

* இது ஒரு சாதியின் பிரச்சனை இல்லை. தமிழகத்தின் சமூகநீதி பிரச்சனை.

* சமூகநீதி சர்வே எடுத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளரும்.

* 69 சதவீத இடஒதுக்கீட்டை காக்க நவீன தரவுகள் தேவைப்படுவதால் சமூக நீதி கணக்கெடுப்பு அவசியம்.

* சமூக நீதி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல்.

* சமூக நீதி சர்வே எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த நாள் தமிழ்நாட்டிற்கான பொன்நாள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com