அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர்கள் கைது

அமோனியா கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Amonia Gas
Published on

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து, அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்த விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமோனியா வாயுக்கசிவால் 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இறால் பண்ணை உரிமையாள்கள் மோகன், ஜோசப் ஆகியோரை காவல் துறை கைது செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com