அதிமுகவில் மீண்டும் சலசலப்பு - அமைச்சர் ஆனந்துடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு

வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில் சந்திப்பு.
TN Secretariat
Published on

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் உடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினர்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com