ஆதவ் அர்ஜூனாவிற்கு நாவடக்கம் தேவை- கே.பி.முனுசாமி எச்சரிக்கை

அதிமுகவையும் தேடி வந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஆதவ் அர்ஜூனாவிற்கு நாவடக்கம் தேவை- கே.பி.முனுசாமி எச்சரிக்கை
Published on

பேப்பரில் மட்டும் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு நாவடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தான்தோன்றித் தனமாக பேசுகிறார்

தலைவருக்காக உழைக்காத ஆதவ் அர்ஜூனா, எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கெல்லாம் ஓடியவர்.

அதிமுகவையும் தேடி வந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

அதிமுக தொண்டன் வாக்களித்து தான் தவெக வெற்றி என கூச்சப்படாது வெட்கப்படாமல் ஆதவ் அர்ஜூனா கூறுகிறார்.

கொச்சைப்படுத்தி பேசுவதை அதவ் அர்ஜூனா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா இருந்தபோது நம்பிக்கைக்குரிய தொண்டனாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com