டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்: சட்டசபையில் உதயநிதி-ஆதவ் அர்ஜூனா காரசார விவாதம்

ஆனலைனில் ஆர்டர செய்தாலும் டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானங்களை வாங்கமுடியும் என்றார்.
aadav arjuna, udhayanidhi stalin
Published on

தமிழக சட்டசபையில் இன்று டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம் நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்

அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது பற்றி விளக்கம் அளித்தார்.

மேலும், த.வெ.க. ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல். டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர். ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும். ஆன்லைனில் ஆர்டர செய்தாலும் டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானங்களை வாங்க முடியும். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது என தெரிவித்தார்.

இடையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜூனா-உதயநிதி விவாதம்

அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா?

லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என பதில் அளித்தார்.

ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்கச் சொல்லுங்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இந்த காரசார விவாதத்தால் அவையில் சிறிது கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அதன்பின் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு என கூறினார்.

அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com