80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
TN CM Vijay
Published on

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.

முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.

பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com