தமிழகத்தில் வருடத்தின் 8 மாதங்களும் வெயில் கொளுத்தும் - எச்சரிக்கும் ஆய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளதுதமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது
தமிழகத்தில் வருடத்தின் 8 மாதங்களும் வெயில் கொளுத்தும் - எச்சரிக்கும் ஆய்வு
Published on

காலநிலை மாற்றம் :

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக   மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆய்வு முடிவுகள் :

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.

தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com