பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது

அன்பழகன், வீனஸ் இருவரும் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Arrested
Published on

பல்லாவரம் அருகே விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் நேற்று மாலை விசிக நிர்வாகி அன்பழகன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அன்பழகன் கொலை வழக்கில் ஈடுபட்ட 7 முக்கிய கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

தொழில் போட்டி காரணமாக விசிக நிர்வாகி அன்பழகனை அவரது நண்பர் வீனஸ் என்பவர் தலைமையிலான கூலிப்படையினர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்

கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்த அன்பழகன் மற்றும் வீனஸ் இருவரும் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து குறுகிய காலத்தில் அன்பழகனின் வளர்ச்சியை பார்த்து பொறாமை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் வீனஸ் செய்து வரும் தொழில்களுக்கு அன்பழகன் முட்டுக்கட்டையாக இருப்பதால் அவரை கொலை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் நேற்றைய தினத்தில் வீனஸ் தலைமையிலான கூலிப்படையினர் அன்பழகனை திருநீர்மலையில் உள்ள திமுக மண்டல அலுவலகத்தில் வைத்து 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது நாகல்கேணி பகுதியை சேர்ந்த வீனஸ், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், காஞ்சிபுரத்தை சேர்ந்த விமல், நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த முகேஷ் கண்ணா, குரோம்பேடை பகுதியை சேர்ந்த ஹரிஹரன், பல்லாவரம் விஷ்னுகுமார், மண்ணிவாக்கம் கார்த்திகேயன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com