

பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:-
எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்திலே ஒரு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. திருமணமான பெண்கள் மட்டுமல்ல, தன் தாயை ஏன் இப்படி செய்தீர்கள்.
ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இந்த இயக்கத்திலே என் தந்தை மறைவிற்கு பிறகு, என் அம்மா அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலே, பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்.
இதுவரை திமுக உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் குடும்ப பெண்களை தரம் தாழ்ந்து அவர்களுக்கு எதிராக யாரும் செயல்பட்டது இல்லை.
அம்மாவை பின்பற்றி வந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை பார்த்தால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மோசமாக உள்ளது.
எனக்கும் எடப்பாடிக்கும் கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் உங்கள் தலைமையின் கீழ், அம்மாவிற்காக இந்த இயக்கத்திற்கு உழைத்து கொண்டிருக்கிற பெண்களை தரக்குறைவாக மானபங்கப்படுத்தும் நபர்களை, நீங்கள் ஊக்குவித்து கொண்டிருக்கிறீர்கள்.
இதையெல்லாம் விட பெண்களை காப்பாற்ற வேண்டிய இந்த காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த அரசு ஒரு மாற்றத்திற்கான அரசாக மக்களால் கொண்டு வரப்பட்டது.
தற்பொழுது உள்ள முதலமைச்சரும் பெண்களுக்கு பாதுகாப்பு தருவேன் என்று கூறுகிறார். சிங்கப்பெண் அதிரடிப்படை முதல்வர் இன்றைக்கு உருவாக்கி இருக்கிறார்.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பெண்கள் தைரியமாக பொது வாழ்க்கைக்கு வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
நல்லாட்சி தரவேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார், ஆனால் கீழ் உள்ள அலுவலர்கள் மாறவில்லை. ஆட்சி மாறிவிட்டது, ஆனால் காட்சி மாறவில்லை. இன்னும் காவல்துறை தன்னை திருத்திக்கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ளவில்லை.
31.03.2026 மற்றும் 11.07.2026 செஞ்சியில் ஒரு புகார், 12.06.2026 மற்றும் 21.07.2026 விழுப்புரத்தில் ஒரு புகார் என பல புகார்கள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளன.
ஐந்து வயது குழந்தையின் கையில் ஒரு பாட்டிலை கொடுத்து ஃபேக் வீடியோவை பரப்பி உள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்.
இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் கூறினார்.