மெரினாவில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி

அதிகாலை ஒரே படகில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க சென்றனர்.சிறிது நேரத்தில் பாஸ்கர், ராஜி ஆகியோரது உடல்கள் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது.
மெரினாவில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி
Published on

ராயபுரம்:

சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் (வயது 61), ராஜி (35). மீனவர்கள். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை ஒரே படகில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது ராட்சத அலையில் சிக்கிய படகு கடலில் கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் பாஸ்கர், ராஜி ஆகிய இருவரும் கடலில் மூழ்கினர். சிறிது நேரத்தில் பாஸ்கர், ராஜி ஆகியோரது உடல்கள் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. அவர்களது படகு மட்டும் விவேகானந்தர் இல்லம் அருகே கரை ஒதுங்கியது.

போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com