தமிழக மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம்.தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல்.
தமிழக மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
Published on

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com