நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்களின் கதி என்ன?

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 400-க்கும் அதிகமானோர் மாயம்.
நேபாளம் வெள்ளப் பெருக்கு
நேபாளம் வெள்ளப் பெருக்கு
Published on

திபெத் எல்லையில் உள்ள நேபாள மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 105 இந்தியர்களை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.

திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் உள்ள மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் ராணுவம்

நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை.

குறிப்பாக ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சியாஃப்ருபெசி என்ற பகுதியில் உள்ள வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்ட மக்கள் சொத்துகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. காத்மாண்டில் இருந்து வடகிழக்கில் திபெத் எல்லையில் இருந்து ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக உயிர்ந்துள்ளது.

தற்போது வரை 400 பேர் மாயமாகியுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதில் 105 பேர் இந்தியவர்கள் ஆவார்கள் எனக் கூறப்படுகிறது. சேறு சகதியுடன் வெள்ளம் கரைபுரண்டு வாகனங்கள், கட்டுமான திட்டங்கள், பாலங்களை அடித்துச் சென்றுள்ளார் உயிரிழப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

பனி ஏரி உருகி வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்

இந்த வெள்ளம் கனமழையால் ஏற்படவில்லை என்று நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய பனிப்பாறை உருவானதாலோ அல்லது பழைய பனிப்பாறை ஒன்று உடைந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பனி ஏரி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.

தமிழர்கள்

இந்த வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com