திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 100 ஆண்டு கால வில்வமரம் வேரோடு சாய்ந்தது

கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான வில்வ மரம் உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 100 ஆண்டு கால வில்வமரம் வேரோடு சாய்ந்தது
Published on: 
Summary

பலத்தமழையால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்த வில்வமரம் வேரோடு சாய்ந்தது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

100 ஆண்டை கடந்த மரம்

திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தில் வில்வமரம், வேப்பமரம், தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான வில்வ மரம் உள்ளது.

வில்வமரம்

இந்த மரத்துடன் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசமரமும் ஒன்றாக இணைந்து வளர்ந்து ஒரே மரம் போல் காட்சி அளித்து வந்தது. வில்வமரத்தில் அதன் வண்ணத்திலேயே பல்லி இருக்கும். அந்த பல்லியில் சித்தர்கள் இருப்பதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதனை பார்த்து வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.

மரம் சாய்ந்தது

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக அடிப்பகுதி பாரம் தாங்காமல் அரசமரத்துடன் இணைந்து இருந்த வில்வமரம் கோவில் கீழே சரிந்து வேரோடு சாய்ந்தது. பக்தர்கள் பல ஆண்டுகளாக இந்த மரத்தை பார்த்து வழிபட்டு வந்த நிலையில் தற்போது மரம் அடியோடு சாய்ந்ததால் அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோவில் நிர்வாகம் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக மீண்டும் ஒரு வில்வ மரத்தை நடவேண்டும் என்று கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com