காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ஆளுநர் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #SathishSivalingam #CommonwealthGames2018
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ஆளுநர் வாழ்த்து
Published on

சென்னை:

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதற்கிடையே, இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சதீஷ்குமாரின் வெற்றி இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது; தங்கம் வென்றதால் ஒலிம்பிக், சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்ல ஊக்கமளிக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SathishSivalingam #CommonwealthGames2018 #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com