

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அமுதா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார். ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
"தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ். அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழச்சி அளிக்கிறது. அவரது பணிசிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்,