விருதுநகரில் தொழிலாளி மர்ம மரணம்

விருதுநகரில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

விருதுநகர்:

விருதுநகர் அண்ணாமலை தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 45). தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் இந்நகர் பைபாஸ் அருகில் உள்ள கல் கிடங்கு அருகே ஒரு அறையில் தங்கியிருந்தார். 

இந்தநிலையில் அவர் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவரது சகோதரர் மணிவண்ணன் (52) கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com