வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் அதிகாரிகள் கவனிப்பார்களா?

வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் கழிவு நீர்குளம் போல் தேங்கி நிற்கும் காட்சி.
வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் கழிவு நீர்குளம் போல் தேங்கி நிற்கும் காட்சி.
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற முறையான வசதிகள் இல்லை. இதனால் அங்கு கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

கொரோனா நோயாளிகள் தங்கி உள்ள மையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று மேலும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அங்கு பணியில் உள்ள ஊழியர்களுக்கும் கொசுக்களால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com