

பொது நிவாரண நிதிக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. எதிலும் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே முதல்வரின் அறிவுரை.
மே 6ம் தேதிக்கு முன்பு இருந்த கணக்குகள் தனியாக வைக்கப்படும். மே 7ம் தேதிக்கு பின் உள்ள கணக்குகள் தனியாக வைக்கப்படும். வரவு, செலவுகள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும். 472 கோடி ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது.
தமிழக நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை, பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.