வாடிப்பட்டி அருகே டிரைவர் கொலையில் ஒருவர் கைது

வாடிப்பட்டி அருகே டிரைவர் கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த நாகராஜன் மகன் ரகுராஜ் (வயது 25). டிரைவர். இவருக்கும் கருப்பட்டியை சேர்ந்த நரி என்ற ராஜேஷ்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி ரகுராஜை ராஜேஷ்குமார், முருகன், சுரேஷ் ஆகியோர் வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது ராஜேஷ்குமார் கத்திரிக்கோலை எடுத்து ரகுராஜை குத்தி கொலை செய்தார்.இதுதொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வழக்குபதிவுசெய்து கரட்டுபட்டி பஸ் நிறுத்தம் முன்பு நின்றிருந்த ராஜேஷ்குமாரை கைது செய்தார். தலைமறைவான முருகன், சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com