

இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், நாட்டின் சுதரந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத் கெவாடியா பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 182 மீட்டர் உயர சிலை அருகே தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
ஜி20 மாநாட்டிற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரோம் சென்றுள்ள காரணத்தால், இந்த விழாவை மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, துணை ராணுவம் மற்றும் குஜராத் போலீஸ் அதிகாரிகள் நடத்திய அணிவகுப்புக்கும் அமித் ஷா தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.