சென்னையை சேர்ந்த 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிப்பு

இரு நிதி நிறுவனங்களின் கீழ் அமைந்துள்ள 35 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய பணம்
இந்திய பணம்
Published on

சென்னை:

சென்னையில் செயல்பட்டு வரும் 2 நிதி நிறுவன குழுமங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இந்த இரு நிறுவனங்களின் கீழ் அமைந்துள்ள 35 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட வருமானத்தை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனங்கள் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அதிக வட்டியுடன் கடன் கொடுத்திருப்பதையும் வருமான வரித்துறையினர் கண்டு பிடித்தனர்.

இந்த சோதனையின் மூலம் வசூலிக்கப்படும் வட்டி பணம் பினாமி வங்கிக்கணக்கில் போடப்பட்டிருப்பதையும், இது எதுவும் வரிக்கு உட்படுத்தவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இதேபோல் இந்த நிதி நிறுவனங்கள் மூலம் பல வெளிப்படுத்தப்படாத சொத்து முதலீடுகளும், கணக்கில் வராத பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

35 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com