அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பில் இருந்து நடிகர் செந்தில் திடீர் நீக்கம்- டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்த நடிகர் செந்தில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்த நடிகர் செந்தில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த நீலாங்கரை எம்.சி.முனுசாமிக்கு தென் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாக வசதிக்காக தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், வேளச்சேரி தொகுதியும், தென் சென்னை தெற்கு மாவட்டத்தில் சைதாப்பேட்டை, மயிலாப்பூர் தொகுதியும், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளும் கட்சியில் உருவாக்கப்பட்டுள்ளன.

தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் கழக துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் தொடர்ந்து செயலாற்றுவார்.

இதேபோல் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் ம.கரிகாலன் பணியாற்றுவார்.

திருநெல்வேலி மாநகர் வடக்கு மாவட்டத்தில் நெல்லை, சங்கரன் கோவில் ஆகிய தொகுதிகளும், திருநெல்வேலி மாநகர் தெற்கு மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலி மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் பரமசிவ ஐய்யப்பனும், திருநெல்வேலி மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் சிந்துபூந்துரை சுரேஷ்குமாரும் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com