புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

அனுமதியின்றி மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்ட 3 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வீரபாண்டி:

திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கருவம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அங்கு மறைத்து வைத்திருந்த 3 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் (வயது 21) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com