வீர சாகச செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே கல்பனா சாவ்லா விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான ‘‘கல்பனா சாவ்லா விருது’’ ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவின்போது முதல்-அமைச்சரால் வழங்கப்படுகிறது. இந்த விருதில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

2021-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அல்லது அரசுச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கோ இம்மாதம் 30-ந் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com