

தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை விற்பனை செய்த 15 பேர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 87 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.