கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் தொடங்கிய நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; 

தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com