‘விடியல்’ என்னும் வார்த்தையை வைத்து மு.க.ஸ்டாலினின் ஓவியம்

கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஓவியர் “விடியல்” என்ற வார்த்தையை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
ஓவியர் மணிகண்டன் வரைந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓவியம்
ஓவியர் மணிகண்டன் வரைந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓவியம்
Published on

முதுகுளத்தூர்:

கலை பண்பாட்டுத்துறையில் வழங்கப்படும் கலைச்செம்மல் விருது மற்றும் அதற்கான தொகை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஓவியர் “விடியல்” என்ற வார்த்தையை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இந்த ஓவியத்தை மணிகண்டன் கலைத்துறை சார்பிலும், அனைத்து கலைஞர்களின் சார்பிலும் சமர்ப்பித்து நன்றி தெரிவித்துள்ளார்

இவர் ஏற்கனவே கலைத்துறையில் சர்வதேச கலை திலகம் மற்றும் அரசும் கலை ரத்னா போன்ற 23 விருதுகள் பெற்றவர். மேலும் தத்ரூபமான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com