ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை -இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடி படகுகள்
மீன்பிடி படகுகள்
Published on

ராமேஸ்வரம்:

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வது தொடர்கிறது. அத்துடன் மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கண்மூடித்தனமாக தாக்குவது அதிகரித்துள்ளது. 

மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசின் செயல்பாடுகளை கண்டிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது.  இனி வரும் காலத்தில் விசாரணையின்றி தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com