

சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெரு ஏரிக்கரை பகுதியை சேர்ந்வர் சின்னதுரை (வயது 24). கட்டிட தொழிலாளி. கடந்த சனிக்கிழமை
தீபாவளியன்று சோழிங்கநல்லூர் குமரன் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். மது பாட்டில்களை வாங்கி கொண்டு வெளியே வந்த
அவரை திடீரென 3 பேர் வழிமறித்தனர். அவரை கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த
செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சின்னதுரை செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.வழிப்பறியில் ஈடுபட்டது செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த
சூர்யா (வயது 19), அஜித் குமார் ( 23) சஞ்சய் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சூர்யா மீது பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது.