மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

சோழவந்தான்:

சோழவந்தான் முதலியார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது60).இவர் தள்ளுவண்டியில் கடலை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் இவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மேட்டுநீரேத்தான் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுரையை சேர்ந்த அபுபக்கர் மகன் அஜித்முகம்மதின் (வயது25) என்பதும் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com