ஸ்கூட்டியை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா தொண்டர்கள்

ஜம்மு காஷ்மீரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர்
போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர்
Published on

ஜம்மு:

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஒருசில மாநில அரசுகள் மாநில வரியை ஓரளவு குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவசேனா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு நகரில் நடந்த இந்த போராட்டத்தின்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியதுடன், ஸ்கூட்டியை தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com