நாம் ஒன்றாக வேண்டும்- அ.தி.மு.க. வென்றாக வேண்டும்: சசிகலா பரபரப்பு பேச்சு

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதில் அக்கறை காட்டாவிட்டால் யாரும் வெற்றி பெற முடியாது.
சசிகலா
சசிகலா
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொன்விழாவையொட்டி ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சசிகலா பேசியதாவது:-

‘‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’’ என்றார் புரட்சித்தலைவி. எதிரிகளின் ஏளனத்திற்கு நாம் இடம்கொடுத்துவிடக் கூடாது.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதில் அக்கறை காட்டாவிட்டால் யாரும் வெற்றி பெற முடியாது.

மறைந்த நமது தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரும்புக் கோட்டையாக அ.தி.மு.க.வை மாற்றி வைத்துள்ளனர். புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்கள் மனம் புண்படும் வகையில் யாரும் பேச வேண்டாம். நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அ.தி.மு.க.வை நான் ஆட்சிக் கட்டிலில் நான் அமர வைத்து விட்டு சென்றேன்.

‘‘கழகத்தின் அடி நாதமே தொண்டர்கள்தான்’’ என்றார் புரட்சித்தலைவர். அத்தகைய அ.தி.மு.க.வை காப்பாற்றுவது நமது அனைவரின் கடமையாகும். தமிழக மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும். அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் வாழ்க, புரட்சித் தலைவி வாழ்க.

இவ்வாறு சசிகலா பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com