காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவோம்- சாமிநாதன் எம்எல்ஏ உறுதி

காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ கூறினார்.
சாமிநாதன்
சாமிநாதன்
Published on

புதுச்சேரி:

பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் ரோடியர் மில் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவதே நமது கோ‌‌ஷம். அதற்காக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நம்மிடையே வந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 200 பேர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளை ராஜினாமா செய்ய அந்த கட்சியின் அலுவலகத்துக்கு சென்றார்கள். ஆனால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டு கிடந்தது.

புதுவையில் தாமரை மலர்ந்தால் புதுச்சேரி ஒளிரும். புதுவையில் இனிமேல் காங்கிரசுக்கு ஓட்டு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சங்கு ஊதிவிட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தந்து வருகிறார். நாடு முழுவதும் அவரது கீழ் வரும். புதுவையில் தாமரை மலரும்போது மக்களுக்கான திட்டங்கள் நிறைவேறும்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com