சேலம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

சேலம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 211 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் தினமும் சுமார் ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். அதே சமயம் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை இரு மடங்கு உயர்ந்து காணப்படும்.

இந்த நிலையில், 2021 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவகைகளை வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

ஒரு சிலர் தனது நண்பர்களுடன் மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் 211 டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடியே 11 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றது. சாதாரண நாட்களில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் புத்தாண்டையொட்டி கூடுதலாக ரூ.2 கோடிக்கு மது வகைகள் விற்பனை நடந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு நடந்த வியாபாரத்தை விட இந்த ஆண்டு புத்தாண்டு மது விற்பனை ரூ.45 லட்சம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com