புதிய கொரோனா மருந்து அறிமுகம் - ஒரு டோஸ் மருந்தின் விலை எவ்வளவு தெரியுமா?

ரோச் இந்தியாவின் ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோச் இந்தியா, கொரோனாவுக்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்து உள்ளது. ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் என அழைக்கப்படும் இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து இந்த மருந்து நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மருந்தை பிரபல மருந்து நிறுவனமான சிப்லா நாடு முழுவதும் வினியோகம் செய்யும்.

இந்த மருந்து லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என கூறியுள்ள சிப்லா நிறுவனம், இதன் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் தேவை குறைவதாகவும், உயிரிழப்பு 70 சதவீதம் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.

2 டோஸ்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். அதில் ஒரு டோசின் விலை ரூ.59,750 ஆகும். இரு டோசும் இணைந்த பாக்கெட்டின் விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com