ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

ராமநாதபுரம் ரஜினி மக்கள் மன்றத்தினர் நடிகர் ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவ மக்களுடன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் இந்த சிறப்பு வழிபாடு நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த் தலைமையில் ரஜினிகாந்த் மீண்டும் எழுச்சி பெற வேண்டியும், உடல் ஆரோக்கயத்திற்காகவும் இந்த வழிபாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகளுடன் ஏராளமான நரிக்குறவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

பின்னர் பொங்கல் பரிசாக 101 நரிக்குறவர் மக்களுக்கு சில்வர் பானை மற்றும் மண் அடுப்பு மற்றும் பொங்கல் பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தில் வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com