ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Published on

சென்னை:

ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com