குவாட் மாநாடு தொடக்கம் - பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குவாட் மாநாட்டில் தலைவர்கள்
குவாட் மாநாட்டில் தலைவர்கள்
Published on

வாஷிங்டன்:

வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டில்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள்  கலந்து கொனடனர்.

பிரதமர் மோடியுடன் சென்ற குழுவில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com