search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்பு பணி
    X
    மீட்பு பணி

    ரஷியாவில் கடும் பனிப்புயல்- மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு

    மலைச்சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த வீரர்கள், இறங்கும்போது கடுமையான பனிப்புயல் வீசியதால் நிலைகுலைந்தனர்.
    மாஸ்கோ:

    ரஷியாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் எல்பிரஸ் மலைச்சிகரம் உள்ளது. ஐரோப்பாவின் மிக உயரமான இந்த சிகரத்தில் ஏறுவதற்கு மலையேற்ற வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டிற்கான மலையேற்ற சீசன் தொடங்கி உள்ள நிலையில், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையானது, மலையேற்ற வீரர்களுக்கு கடும் சவாலாக உள்ளது.

    இந்நிலையில், நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட வீரர்களில் 5 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

    மொத்தம் 19 மலையேற்ற வீரர்கள் சிகரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஏறும்போது ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வழிகாட்டி உதவியுடன் அவர் அடிவார முகாமிற்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

    மற்றவர்கள் வெற்றிகரமாக சிகரத்தை (18510 அடி) அடைந்தனர். ஆனால் இறங்கும்போது கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் வீரர்கள் நிலைகுலைந்தனர். 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தபோது, அவர்களால் பனிப்புயலை சமாளிக்க முடியவில்லை. பனியில் சிக்கி கடும் குளிர் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் சில வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×