பஞ்சாப் நிதி மந்திரி மன்பிரீத் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதி

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

தற்போது ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பஞ்சாப்பிலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் நிதி மந்திரி மன்பிரீத் சிங் பாதலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com