விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது 17 அரசு வாகனங்கள், 300-க்கும் அதிக பேரிகார்டுகள் சேதமடைந்ததாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில், பல்வேறு கார்கள் தீப்பிடித்து எரியும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படங்கள் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வைரல் படங்களை ஆய்வு செய்ததில் அவை புல்வாமா தாக்குதலுக்கு எதிராக ஜம்முவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படங்கள் 2019 ஆண்டு எடுக்கப்பட்டவை ஆகும். 

இதுபற்றிய இணைய தேடல்களில் இதே படங்கள் அடங்கிய செய்தி தொகுப்புகள் இணையத்தில் 2019 வாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி வைரல் புகைப்படங்கள் பிப்ரவரி 15, 2019 அன்று எடுக்கப்பட்டவை ஆகும். 

அந்த வகையில் வைரல் புகைப்படங்களுக்கும் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com