அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது வழக்கு

திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்செந்தூர்:

வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் கோவில்களில் வழிபட அனுமதி கேட்டு பாரதிய ஜனதா சார்பில் திருச்செந்தூரில் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் 40 பெண்கள் உள்பட 350 பேர் மீது திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com