பாளை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

பாளை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

பாளை அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உய்காட்டான் (வயது52). இவரது மகன் பால்சிதம்பரம் (21).

இவர் அந்த பகுதியில் ஒர்க்ஷாப் வைப்பதற்காக தன்னுடைய தங்க நகையை தந்தையிடம் கழற்றி கொடுத்து பணம் ரூ.20 ஆயிரம் ஏற்பாடு செய்யும்படி கூறி உள்ளார்.

ஆனால் உய்க்காட்டான் தங்க நகையை விற்பனை செய்து அந்த பணத்தில் கடை பார்க்காமல் தினசரி ஊர் சுற்றி மது குடித்து விட்டார்.

இது பால்சிதம்பரத்திற்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் தந்தையிடம் சென்று நகை விற்ற பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பால்சிதம்பரம் அரிவாளால் உய்க்காட்டானை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த உய்க்காட்டான் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பால் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com