நசரத்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

நசரத்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பூந்தமல்லி:

மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 36), தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு நசரத்பேட்டை அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் செல்போனை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்ததன் பேரில் திருவேற்காட்டை சேர்ந்த அஜித் குமார் என்ற புல்லட் அஜித் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அன்றைய தினமே அவர் கால்டாக்சி டிரைவர் ஒருவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com