நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செல்லூர். சுனாமி குடியிருப்பை சேர்ந்த பதினெட்டாம் படியான் (வயது 41), பிஆர்புரம், கோவில் தெரு, அந்தோணி ராஜ் (34) ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளன.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com