தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் இன்று 67-வது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்துக்கு கலைச்சேவையை பாராட்டி திரைத்துறையின் உயரிய விருதான  தாதாசாகேப் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!

திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com