ரஜினியின் முடிவை மக்களும் நாங்களும் எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயகுமார்

ரஜினியின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயகுமார்
அமைச்சர் உதயகுமார்
Published on

சென்னை:

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும், ஆரோக்கியமான உணவு, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு இன்றுடன் 150 நாட்களை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு தேசிய விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய டுடே ஆய்வில் தமிழக முதலமைச்சர் நல்ல நிர்வாகம் வழங்குகிறார் என தெரிவித்து உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் 18 சதவீதமாக இருந்தது. தற்போது 0.5 சதவீதம் தான் உள்ளது.

280 நோயாளிகள்தான் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது ஒருவர் கூட இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சிகிச்சையில் உள்ளனர்.150 நாட்களில் சுமார் 15 லட்சம் உணவு, சத்தான பானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திமுக ஓட்டு வாங்குதற்காக வேண்டும் என்றால், அதிமுக அரசை பற்றி குறை கூறலாம். திமுகவின் உள் நோக்கம் எடுபடாது. அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. கனிமொழி, எடப்பாடியில் அல்ல விண்வெளியில் பிரசாரத்தை தொடங்கினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. ரஜினி நல்லவர். ரஜினியின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com