அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்த உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை:

சசிகலா அ.தி.மு.க. கொடி பயன்படுத்தியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

சசிகலாவும் அவரோடு இருந்தவர்களும், 2017-ம் ஆண்டிலேயே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத அவர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை. அது சட்டத்திற்கும் எதிரானது.

மேலும் அவருக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவும் உரிமைகள் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com