மேலூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

மேலூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மேலூர்:

மேலூர் அருகே அ.வலையபட்டியைச் சேர்ந்தவர் சுதா. இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 19), சூர்யா (21) ஆகியோர் வீடு புகுந்து 1¼ பவுன் நகை, 2 செல்போன்கள், 10 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com